නුවරඑළිය දිස්ත්රික් සම්බන්ධිකරණ කමිටු රැස්වීම නුවරඑළිය දිස්ත්රික් සංවර්ධන කමිටු සම සභාපති වරුන් වන මධ්යම පළාත් ආණ්ඩුකාර මහාචාර්ය එස්.බි.එස් අභයකෝන් මහතාගේ සහ පාර්ලිමේන්තු මන්ත්රි මංජුල සුරවීරආරච්චි මහතාගේ ප්රධානත්වයෙන් අද (30 ) දින නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයීය ආශ්චර්ය ශාලාවේ දී පැවැත්විණි .
ස්වදේශ කටයුතු චක්රලේඛ 03/2025 දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටූ ප්රතිසංවිධානය කිරීම පිළිබඳව මෙහිදී නිලධාරීන් දැනුවත් කිරීම සිදු කරන ලදී. ඒ අනුව සම්බන්ධීකරණ කමිටුව පැවැත්වීමේ දී කාර්තුවකට වරක් එනම් මාස තුනකට වරක් රැස්වීමට තීරණය කෙරිණි. එමෙන්ම දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටුව හා සමගාමීව දිස්ත්රික් සැලසුම් කමිටුව, මිල කමිටුව ආදි අනු කමිටු ක්රියාත්මක කිරීමට ද තීන්දු කෙරිණි.
නුවරඑළිය දිස්ත්රික්කයේ ජනතාව මුහුණ දෙන පානීය ජල ගැටළුවට ඉක්මනින් විසදුම් ලබා දීමට මෙහිදී යෝජනා වූ අතර දැනට නුවරඑළිය නගර සභාව මගින් ක්රියාත්මක කරන නුවරඑළිය නගරය ආශ්රිත ජල සම්පාදන මෙහෙයුම් කටයුතු ජලසම්පාදන මණ්ඩලය වෙත පැවරීමට මෙහිදී තීන්දු විය.
ප්රජා ශක්ති ජාතික වැඩසටහන පිලිබදව මෙහිදී නිලධාරීන් සහ මහජන නියෝජිතයන් දැනුවත් කල අතර, එම වැඩසටහන ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස මට්ටමින් සහ ග්රාම නිලධාරී වසම් මට්ටමින් ක්රියාත්මක වන ආකාරය සම්බන්ධයෙන්ද මෙහිදී දැනුම්වත් කරන ලදී.
විමධ්යගත අයවැය වැඩසටහන
වතු ප්රජාවගේ යටිතල පහසුකම් සංවර්ධන වැඩසටහන
ආපදා වතු නිවාස ව්යාපෘතිය- හඟුරන්කෙත
ලෝක ආහාර වැඩසටහන යටතේ ජාතික පාසල් පෝෂණ සහ ගෘහස්ථ පාසල් පෝෂණ වැඩසටහන පිළිබඳ දැනුවත් කිරීම
ජීවනෝපාය සංවර්ධන වැඩසටහන
සංචාරක අමාත්යාංශයේ ප්රතිපාදන යටතේ ක්රියාත්මක ව්යාපෘති
ග්රාමිය මාර්ග සංවර්ධන වැඩසටහන
දිස්ත්රික් සංවර්ධන වැඩසටහන පිලිබදව මෙහිදී මුලික වශයෙන් සාකච්ඡාවට බඳුන් වූ අතර clean srilanka ජාතික වැඩසටහනට සමගාමිව බස් නැවතුම් පොලවල් පිරිසිදු කිරීම සම්බන්ධයෙන් මෙහිදී සාකච්ඡා කෙරිණ.
නුවරඑළිය ආර්ථික මධ්යස්ථානයේ එළවලු මිල තීරණය කිරීම සම්බන්ධයෙන් පත්කළ කමිටුවේ වාර්තාව ඉදිරි සති දෙක තුල තම වෙත ලැබෙන බවත් ඒ අනුව ඉදිරි ක්රියාමාර්ග ගන්නා බවත් නුවරඑළිය දිස්ත්රික් ලේකම්තුමිය මෙහිදී දැනුම් දෙන ලදී.
නුවරඑළිය ග්රෙගරි වැව ආශ්රිත කටයුතු වෙනුවෙන් වෙනම කමිටුවක් පත්කළ අතර සංචාරකයින්ගේ ආරක්ෂාව සහතික කිරීම සහ යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීම මෙම කමිටුවට පැවරෙන ප්රධාන කාර්යයන් වේ.
ආරක්ෂාව, සෞඛ්ය සේවා, අධ්යාපනය, ප්රවාහනය පිලිබදව අදාල ආයතන වල ප්රගතිය මෙහි දී ප්රධාන වශයෙන් සාකච්ඡා කල අතර වෙනත් අමාත්යාංශ/දෙපාර්තමේන්තු සහ අධිකාරීවල ගැටළු සාකච්ඡා කිරීම ද සිදු කරන ලදී.
මෙම සම්බන්ධිකරණ කමිටු රැස්වීම සදහා අධ්යාපන හා උසස් අධ්යාපන නියෝජ්ය අමාත්ය මධුර සෙනෙවිරත්න, පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන වි. රාධා ක්රිෂ්ණා, පි.ජි. විජේරත්න, අනුෂ්කා තිලකරත්න. කේ. කලෙයිචෙල්වි යන මහත්ම මහත්මින්, නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මිය, , මධ්යම පලාත් ප්රධාන ලේකම් අජිත් ප්රේමසිංහ මහතා ඇතුළු උසස් රාජ්ය නිලධාරීන් පිරිසක් එක්ව සිටියහ.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
-----------------------------------
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் அவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி அவர்களினதும் தலைமையில் இன்றைய (30) தினம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் நடைபெற்றது.
உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கை 03/2025 மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மறுசீரமைத்தல் தொடர்பில் இதன்போது உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது. அதற்கமைய ஒருங்கிணைப்புக் குழுவினை நடாத்தும்போது காலாண்டிற்கு ஒருமுறை அதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினை சார்ந்த வகையில் மாவட்ட திட்டமிடல் குழு, விலை நிர்ணயக் குழு ஆகிய துணைக் குழுக்களை நடைமுறைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட மக்கள் முகம் கொடுக்கும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கான யோசனைகள் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், தற்போது நுவரெலியா மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நுவரெலியா நகரம் சார்ந்த நீர் வழங்கல் செயற்பாட்டு அலுவல்களை நீர் வழங்கல் சபையிடம் கையளிப்பதென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டம் பற்றி இதன்போது உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்கள் பிரநிதிகளுக்கும் தெளிவுப்படுத்தப்பட்டதுடன், அவ்வேலைத்திட்டம், பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்திலும், கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற முறை பற்றி இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டது.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம்
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
வேலைத்திட்டம்
அனர்த்த பெருந்தோட்ட வீடமைப்பு கருத்திட்டம் -
ஹங்குரன்கெத்த
உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய
பாடசாலைகள் போசாக்கு மற்றும் உள்ளக பாடசாலைகள்
போசாக்கு வேலைத்திட்டம் பற்றி தெளிவுப்படுத்தல்.
வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம்
சுற்றுலா அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்
நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்றிட்டங்கள்
கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம்
மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம்
ஆகியன பற்றி இதன்போது பிரதானமாக கலந்துரையாடப்பட்டதுடன், clean srilanka தேசிய வேலைத்திட்டத்தையொட்டியதாக பேரூந்து தரிப்பிடங்களை துப்பரவு செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகளை தீர்மானிப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களில் தனக்கு கிடைக்கப்பெறும் எனவும், அதற்கமைய மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
நுவரெலியா கிறெகரி வாவி சார்ந்த அலுவல்களுக்காக வேறாக குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியன இக்குழுவிடம் ஒப்படைக்கப்படுகின்ற பிரதான பணிகளாகும்.
பாதுகாப்பு, சுகாதார சேவைகள், கல்வி, போக்குவரத்து தொடர்பான உரிய நிறுவனங்களின் முன்னேற்றங்கள் பற்றி இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்பட்டதுடன், ஏனைய அமைச்சுகள் திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகளின் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன், பி.ஜீ.விஜேரத்ன, அனுஷ்கா திலகரத்ன, கே.கலைச்செல்வி ஆகியோரும், நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன், மத்திய மாகாண பிரதான செயலாளர் திரு.அஜித் பிரேமசிங்க உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.























