ඇති වූ ආපදා තත්ත්වය හේතුවෙන් නුවරඑළිය දිස්ත්රික්කයේ පාසැල් නැවත ආරම්භ කිරීම සහ අධ්යාපන ක්ෂේත්රයේ මතුව ඇති ගැටළු සම්බන්ධයෙන් පරිවේනාධිපති ස්වාමින් වහන්සේලා, කලාප අධ්යාපන අධ්යක්ෂකවරුන්, විදුහල්පතිවරුන් දැනුවත් කිරීමේ සාකච්ඡාවක් අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසුරිය මහත්මියගේ ප්රධානත්වයෙන් 2025.12.13 වන දින නුවරඑළිය සිනෙසිටා නගර ශාලවේදී පැවැත්විණ.
දිවයිනේ සියලු පාසැල් දෙසැම්බර් 16 වන දින ආරම්භ කිරීමට අධ්යාපන අමාත්යාංශය තීරණය කලත් පැවති ආපදා තත්ත්වය හේතුවෙන් පැසල් පැවැත්වීම සම්බන්ධ තීන්දු තීරණ ගැනීමට අදාළ පළාත් දිස්ත්රික්ක බලධාරීන්ට බලය ලබා දී ඇති බව අග්රාමාත්යතුමිය පවසනවා.
අවධානම් ප්රදේශවල පිහිටා ඇති පාසල් වලට NBRO වාර්තා ලබා ගැනීම අනිවාර්ය බවත් ප්රවේශ මාර්ග සහ යටිතල පහසුකම් සම්බන්ධයෙන් වැඩි අවධානය යොමුකළ යුතු අතර පාසල් යාම දරුවන්ට බරක් නොවිය යුතු බවත් , ගුරුභවතුන්ට සහ දරුවන්ට පහසු ඇදුමක් පැළදීමේ අවස්ථාව ඇති බවද මෙහිදී අගමැතිතුමිය මෙහිදී අවධාරණය කලාය.
වාර විභාග, විෂය නිර්දේශ වලින් ඔබ්බට ගොස් දරුවන්ගේ මනස සුවපත් කිරීමට උත්සහ කරන ලෙසත්, ආපදා වලින් ආතතියට පත් ළමුන් එයින් මුදවාගැනීමට නම්යශිලිව අවශ්ය කටයුතු යොදන ලෙස මෙහිදී අගමැතිතුමිය උපදෙස් ලබා දුන්නාය.
කුමන බාධක පැමිණියත් නව අධ්යාපන ප්රතිසංස්කරණ ක්රියාත්මක කිරීම සිදුකරන බව හා මේවන විට ගුරුවරුන් පුහුණු කිරීමේ කටයුතු 51% අවසන් බව අග්රාමාත්යතුමිය මෙහිදී පැවසුවාය .
මෙම ස්භාවික ව්යසනයෙන් පසුව රට පැවති තත්ත්වයට නොව ඊට වඩා ඉදිරියට ගෙන යාමට සියලු දෙනා කැපවීමෙන් වැඩ කලයුතු බව ඇය වැඩිදුරටත් පෙන්වා දුන්නාය.
මෙම විශේෂ සාකච්ඡාව සදහා දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී මංජුල සුරවීරආරච්චි, නියෝජ්ය අමාත්ය මධුර සෙනවිරත්න , පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන කලේයි චෙල්වි, අනුෂ්කා තිලකරත්න, යන මහත්ම මහත්මින් ඇතුළු මහජන නියෝජිතයන්, නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මිය, මධ්යම පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් මධුපානි පියසේන මහත්මිය ඇතුලු රාජ්ය නිළධාරින් සහභාගී වී සිටියහ.
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பதற்காக பிரதமர் நுவரெலியாவிற்கு.
------------------------------------
ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் கல்வித் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரிவெணாதிபதி பௌத்த மத குருமார்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025.12.13 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் நடைபெற்றது.
நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் திசெம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளபோதிலும், நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதென பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.
பாதிக்கத்தக்க பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு Nடீசுழு அறிக்கைகளைப் பெறுவது கட்டாயமானதெனவும், பிரவேச வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியதுடன், பாடசாலைகளுக்கு செல்வது பிள்ளைகளுக்கு சுமையாக இருக்கக்கூடாதெனவும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வசதியான ஆடைகளை அணிவதற்கான வாய்ப்பு உள்ளதெனவும் இதன்போது பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார்;.
தவணைப் பரீட்சைகள், பாடத்திட்டங்களுக்கு அப்பால் சென்று பிள்ளைகளின் மனநிலையை இயல்பான நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள பிள்ளைகளை அதிலிருந்து விடுவிப்பதற்காக நெகிழ்வான முறையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது பிரதமர் அவர்கள் பணிப்புரை வழங்கினார்.
எந்தவொரு தடைகள் இருந்தபோதிலும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் எனவும், தற்போது ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் அலுவல்கள் 51% நிறைவடைந்துள்ளதெனவும் பிரதமர் அவர்கள் இதன்போது கூறினார்.
இந்த இயற்கை பேரிடருக்குப் பின்னர், நாடு இருந்த நிலையைவிட நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த விசேட கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீராராச்சி, பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கலைச்செல்வி மற்றும் அனுஷ்கா திலகரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மதுபானி பியசேன உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



















