Welcome to the official webpage of District Secretariat, Nuwara Eliya
District Secretariat, Nuwara Eliya.

District Secretary

GA MADAM

 

Mrs. R.A.D.T.N.Thennakoon

ආර්.ඒ.ඩී.ටී.එන්.තෙන්නකෝන් මහත්මිය

திருமதி. ஆர்.ஏ.டி.டி.என். தென்னகோன்

View more

“පොහොසත් රටක් - ලස්සන ජීවිතයක්” රජයේ ප්‍රතිපත්තියට අනුව ‘ප්‍රජාශක්ති’ දිළිඳු බව තුරන් කිරීමේ ජාතික ව්‍යාපාරය ක්‍රියාත්මක කිරීමේ අරමුණින් එහි යාන්ත්‍රණය පිළිබඳ දැනුවත් කිරීමේ වැඩසටහන ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ සහකාර ලේකම් සංජය වීරසිංහ මහතා සහ නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් දිසාපති තුෂාරි තෙන්නකෝන් මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් පසු ගිය (17) දා නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ආශ්චර්ය ශාලාවේ දි පැවැත්විණ.
එක්සත් ජාතීන්ගේ තිරසර සංවර්ධන අරමුණු අනුව වර්ෂ 2030 වන විට සෑම රටකම සෑම ආකාරයකම දරිද්‍රතාව අවසන් කිරීමට ක්‍රියා කළ යුතු වන අතර අන්ත දුගී භාවයෙන් පෙළෙන සියලු දෙනා එයින් මුදවා ගැනීම, බහුවිධ දරිද්‍රතාවයෙන් පෙළෙන පිරිසෙන් අවම වශයෙන් අඩක් වත් ඉන් මුදවාගැනීම, සියලුදෙනා ආවරණය වන පරිදි සමාජ සුරක්ෂිතතා වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීම, පොදුසම්පත් සඳහා සාධාරණ ප්‍රවේශය, දේශගුණික විපර්යාශ තත්ත්වයන්ගෙන් සියලු දෙනාට රැකවරණ සැලසීම මෙහි ඉලක්ක ගතකරුණු වේ.
ඒ අනුව පොහොසත් වීම යනු ආර්ථිකමය වශයෙන් ශක්තිමත් වීම පමණක් නොවන අතර අධ්‍යාපනය, සෞඛ්‍යය, යහපත් ජීවන තත්ත්වය සහ ආකල්පමය වශයෙන්ද ශක්තිමත් වීම තුළින් පුද්ගල පෞරුෂය වර්ධනය හා රටේ ආර්ථික සංවර්ධනය හා බද්ධ වෙමින් ජීවන තත්ත්වය උස්ස් තත්ත්වයකට පත් කරලීම මෙහි අරමුණයි.
අවස්ථා ගණනාවකදී රට තුළ විවිධ සමාජ සුභසාධන හා සමාජ ආරක්ෂණ වැඩසටහන් ක්‍රියාත්මක කරනු ලැබුවත්, කරමින් තිබුණත් එම වැඩසටහන් ඒකාබද්ධ ප්‍රවේශයකින් සහ සක්‍රිය ප්‍රජා සහභාගිත්වයකින් තොරව ක්‍රියාත්මක වී ඇති අතර ‘ප්‍රජාශක්ති’ වැඩසටහන තුළින් සියලුම සංවර්ධන සුභසාධන සමාජ ආරක්ෂණ වැඩසටහන් ඒකාබද්ධ වැඩපිළිවෙලක් යටතේ සිදු කෙරෙන බවත්, යථාර්ථවත් පුළුල් අරමුණු ඉලක්ක කරගත් විද්‍යාත්මක සහ සියලු පාර්ශවකරුවන් සමග ඒකාබද්ධ වූ සංවිධානාත්මක ව්‍යුහයක් ඔස්සේ පුරවැසි කේන්ද්‍රීය සංවර්ධන ව්‍යුහයක් ස්ථාපනය කිරීම අරමුණු කොටගෙන ක්‍රියාත්මක කරන බවත් මෙහිදී අනාවරණය විය.
මෙම අවස්ථාව ට ග්‍රාමීය සංවර්ධන අමාත්‍යාංශයේ අතිරේක ලේකම් (සංවර්ධන ) නාලිකා පියසේන, ග්‍රාමීය සංවර්ධන අමාත්‍යාංශයේ අතිරේක ලේකම් (පාලන) රාධා නානයක්කාර, නුවරඑළිය අතිරේක දිස්ත්‍රික් ලේකම් දිනිකා කවිසේකර අතිරේක දිස්ත්‍රික් ලේකම් (ඉඩම් ) ශාලිකා ළිඳකුබර මහත්මින් සහ දිස්ත්‍රික්කයේ සියලුම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලවල ප්‍රාදේශීය ලේකම්වරුන්, ජ්‍යෙෂ්ඨ පොලිස් නිලධාරීන් ඇතුළු රාජ්‍ය නිලධාරීන් විශාල පිරිසක් මෙම අවස්ථාවට එක් සිටිහ.
“பிரஜாசக்தி” வறுமை ஒழிப்பு தேசிய திட்டம் பற்றி நுவரெலியா அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தல்.
================
“வளமான நாடு - அழகான வாழ்க்கை” அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய, “பிரஜாசக்தி” வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அதன் பொறிமுறை தொடர்பில் தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதி சிரேஷ்ட உதவி செயலாளர் திரு. சஞ்ஜய வீரசிங்க அவர்களினதும், நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி. துஷாரி தென்னகோன் அவர்களினதும் தலைமையில் கடந்த 17 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி நோக்கத்திற்கு அமைய 2030 ஆம் ஆண்டளவில் அனைத்து நாடுகளிலும், அனைத்து விதத்திலும் வறுமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், கடுமையான வறுமையில் வாடும் அனைவரையும் அதிலிருந்து விடுவித்துக்கொள்ளல், பலவகையான வறுமைகளில் வாடும் மக்களில் அரை பகுதியினரையாவது அதிலிருந்து விடுவித்துக்கொள்ளல், அனைவரையும் உள்ளடக்கும் வகையில் சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், பொது வளங்களுக்கான நியாயமான அணுகல், காலநிலை மாற்றங்களிலிருந்து அனைரையும் பாதுகாத்தல் ஆகியன இதன் இலக்குகளாகும்.
அதற்கமைய வளமாதல் என்பது பொருளாதார ரீதியில் வலிமையடைவது மாத்திரமின்றி, கல்வி, சுகாதாரம், சிறந்த வாழ்க்கை நிலைமை மற்றும் மனப்பான்மை ரீதியல் வலிமையடைவதன் மூலம் தனிநபர் ஆளுமையை விருத்தி செய்து நாட்டின் பொருளாதார அபிவிருத்தியுடன் இணைத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
பல சந்தர்ப்பங்களில் நாட்டில் பல்வேறு சமூக நலன்புரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும், நடைமுறைப்படுத்தப்படுகின்போதிலும், அவ்வேலைத்திட்டங்கள் ஒருங்கிணைந்த அணுகல் மற்றும் தொடர்ச்சியான சமூக பங்கேற்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், “பிரஜாசக்தி” வேலைத்திட்டம் மூலம் அனைத்து அபிவிருத்தி நலன்புரி சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டங்களும், ஒருங்கிணைந்த வேலையொழுங்கின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றதெனவும், யதார்த்தமான பரந்த நோக்கத்தை இலக்காகக் கொண்ட விஞ்ஞான ரீதியான மற்றும் அனைத்து தரப்பினருடனும் இணைந்த தாபனக் கட்டமைப்பின் ஊடாக பிரஜைகளை மையமாகக்கொண்ட அபிவிருத்தி கட்டமைப்பை நிறுவும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றதெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) நாலிகா பியசேன, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ராதா நாணயக்கார, நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. தினிகா கவிசேகர, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி.ஷாலிகா லிந்தகும்புர மற்றும் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.
1
2
3
4