අපදාවෙන් හානියට පත් නුවරඑළිය ජන ජිවීතය නැවත යථා තත්ත්වයට පත්කිරිමේ කටයුතු පිළිබදව සාකච්ඡා කිරීම සදහා පැවැති විශේෂ දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම අද දින පෙරවරුවේ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්රධානත්වයෙන් නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණ.
විපතට පත් ජනතාවට සහන සැලසීම හා දිස්ත්රික්කයේ හානියට පත් මෙතෙක් අවසන් කිරිමට නොහැකිව ඇති මහාමාර්ග, විදුලිය, පානීය ජලය, සන්නීවේදන පහසුකම්, සෞඛ්ය , වාරිමාර්ග කටයුතු පිළිබඳව විමසීමක් සිදු කල ජනාධිපතිවරයා මෙම කටයුතු ඉතා ඉක්මනින් යථාතත්වයට පත්කිරීමට අවශ්ය පියවර ගන්නා ලෙස නිලධාරීන් ට උපදෙස් ලබාදීම සිදු විය.
මාර්ග සංවර්ධන අධිකාරිය, පළාත් මාර්ග සංවර්ධන අධිකාරිය, පළාත් පාලන ආයතන කිසිවකට අයත් නොවන මාර්ග 600 වැඩි ප්රමාණයක් නුවරඑළිය දිස්ත්රික්කයේ ඇති බව මෙහිදී අනාවරණය වූ අතර මෙම මාර්ග සුදුසු ආයතන වෙත පවරන ලෙසද ජනාධිපතිවරයා මෙහිදී උපදෙස් ලබා දෙන ලදි.
පසුගියදා නුවරඑළිය නගරයේ ජල ගැළිම් තත්ත්වයක් ඇතිවීමට හේතු වූ ග්රෙගරි වැවේ භාරකාරත්වය වාරිමාර්ග දෙපාර්තමේන්තුවට පවරන ලෙසත්, එහි ජල තලයේ සිදු කරන බෝට්ටු ධාවනය ඇතුළු ආර්ථික කටයුතු ගිවිසුම්ගතව නගර සභාව මගින් සිදු කරන ලෙසිත් මෙහිදී ජනාධිපතිවරයා විසින් උපදෙස් ලබා දෙන ලදි.
එළවළු වගාවෙන් සියයට 20 ක් පමණ ආපදා හේතුවෙන් විනාශ වි ඇති බවත්, එය එළවළු හිගයකට හේතු නොවන බවත් මෙහිදී අනාවරණය විය.
එහිදී අදහස් දැක්වු ජනාධිපතිතුමන් සදහන් කලේ එළවළු හිග බව පවසමින් සංචාරක හෝටල් හිමියන් විසින් සීත කල එළවළු ආනයනය කිරීමට ඉල්ලිම් කල බවය. එය සිදු නොකිරීම ට පියවර ගන්නා ලෙස නිළධාරින් ට උපදෙස් දුන් ජනාධිපතිතුමන් තව දුරටත් සදහන් කලේ නුවරඑළියේ එළවළු හිගයක් නොමැති බව මාධ්ය මගින් දැනුවත් කලයුතු බවය.
මෙම අවස්ථාව සදහා නුවරඑළිය දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු සම සභාපති මධ්යම පළාත් ආණ්ඩුකාරවර සරත් බී. එස්. අභයකෝන් , සම්බන්ධීකරණ කමිටු සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී මංජුල සුරවීරආරච්චි, නියෝජ්ය අමාත්ය මධුර සෙනවිරත්න , පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන වී. රාධ ක්රිෂ්ණා, පළනි දිගම්බරන්, රංජිත් විජේරත්න, කලේයි චෙල්වි, අනුෂ්කා තිලකරත්න, යන මහත්ම මහත්මින් ඇතුළු මහජන නියෝජිතයන්, මුදල් අමාත්යාංශ ලේකම් හර්ෂණ සූරියපෙරුම, මධ්යම පළාත් ප්රධාන ලේකම් අජිත් ප්රේමසිංහ , නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මිය ඇතුලු රාජ්ය නිළධාරින් පිරිසක්ද සහභාගී වී සිටියහ.
நுவரெலியா விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
=================================================
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்;டம் இன்றைய தினம் முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் மாவட்டத்தின் சேதமடைந்துள்ள இதுவரையில் திருத்தியமைத்துக்கொள்ள முடியாதுள்ள நெடுஞ்சாலைகள்,மின்சாரம், குடிநீர், தொடர்பாடல் வசதிகள், சுகாதாரம், நீர்ப்பாசன அலுவல்கள் பற்றி விசாரித்த ஜனாதிபதி அவர்கள் இவ்வலுவல்களை மிகவும் துரிதமாக இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆகிய எந்தவொரு நிறுவனத்திற்கும் உரித்தற்ற வீதிகள் 600 இற்கும் அதிகமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ளதென இதன்போது தெரியவந்ததுடன், இவ்வீதிகளை தகுந்த நிறுவனத்திற்கு கையளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார்.
நுவரெலியா நகரில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த கிறெகரி வாவியின் பொறுப்பினை நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கையளிக்குமாறும், அதன் நீர் மேற்பரப்பில் நடாத்தப்படுகின்ற படகு ஓட்டம் உள்ளிட்ட பொருளாதார அலுவல்களை உடன்படிக்கைக்கு உட்படும் அடிப்படையில் மாநகர சபையினால் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
நூற்றுக்கு இருபது வீதமான மரக்கறி செய்கை அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ளவும்> அது மரக்கறி பற்றாக்குறைக்கு காரணமாக அமையாது எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்> மரக்கறிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென கூறி சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் குளிரூட்டப்பட்ட மரக்கறிகனை ஏற்றுமதி செய்வதற்கு கோரியுள்ளனர் என குறிப்பிட்டார். அவ்வாறு செய்யாதிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், நுவரெலியாவில் மரக்கறிகளுக்கான பற்றாக்குறை இல்லையென ஊடகங்கள் மூலம் அறிவிக்க வேண்டுமென மேலும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கௌரவ இணைத் தலைவரும் மத்திய மாகாண ஆளுநருமான சரத் பி.எஸ்.அபயகோன், ஒருங்கிணைப்புக் குழுவின் கௌரவ தலைவரும் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆராச்சி,பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினார்களான வீ.இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், ரஞ்சித் விஜேரத்ன, கலைச்செல்வி, அனுஷ்கா திலகரத்ன ஆகியோர் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஸன சூரியபெரும, மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமசிங்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.









