செய்தி மற்றும் நிகழ்வுகள்

මේ දිනවල නුවරඑළිය නගරයේ ව්‍යාපාරිකයින් හට කීරි සම්බා සහල් අලෙවි කිරීමේදී මතුවී ඇති ගැටලු සම්බන්ධයෙන් සාකච්ඡා කිරීම සදහා විශේෂ සාකච්ඡාවක් දිස්ත්‍රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් පසුගිය (19) දා නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ දී පැවැත්විණි.
සංචාරක ව්‍යාපාරය මත පදනම් වු වෙළෙඳ රටාවක් සහිතව නුවරඑළිය ප්‍රදේශයේ සංචාරක හෝටල් සදහා කිරි සම්බා සහල් විශාල වශයෙන් අවශ්‍ය වේ.
පවතින කිරී සම්බා සහල් හිගය සහ මිල හේතුවෙන් මෙම ගැටලු ඇති වි තිබේ .
ඒ අනුව නුවරඑළිය ඒකාබද්ධ වෙළඳ සංවිධානයේ නියෝජිතයන් සහ රාජ්‍ය නිලධාරීන් අතරින් මෙම සාකච්ඡාව සිදුය.
මෙම අවස්ථාවට නුවරඑළිය කුඩා ව්‍යාපාර අංශයේ සහකාර අධ්‍යක්ෂ ඩී.ජී.එන් බංඩාර, පාරිභෝගික සේවා අධිකාරියේ නුවරඑළිය ස්ථාන භාර නිලධාරී අමිල රත්නායක, නුවරඑළිය ඒකාබද්ධ වෙළඳ සංවිධානයේ සභාපති ඩග්ලස් නානායක්කාර, ලේකම් අජිත් ජයසිංහ යන මහත්වරු ඇතුලු නගරයේ ව්‍යාපාරික පිරිසක් සහභාගී වුහ.
நுவரெலியாவில் கீரி சம்பா விற்பனையின்போது உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல், மாவட்ட செயலாளரின் தலைமையில்.
===================
இந்நாட்களில் நுவரெலியா நகரில் வியாபாரிகளுக்கு கீரி சம்பா விற்பனையின்போது உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் கடந்த 19 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
சுற்றுலாதுறையில் தங்கியுள்ள வியாபார முறைமையுடன் கூடிய நுவரெலியா பிரதேசத்தின் சுற்றுலா ஹோட்டல்களுக்கு கீரி சம்பா அதிக அளவில் தேவைப்படுகின்றது.
நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை மற்றும் விலை காரணமாக பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
அதற்கமைய நுவரெலியா ஒருங்கிணைந்த வர்த்தக அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்குமிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா சிறுதொழில் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. டி.ஜீ.என்.பண்டார, நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் நுவரெலியா நிலையப் பொறுப்பதிகாரி அமில ரத்நாயக்க, நுவரெலியா ஒருங்கிணைந்த வர்த்தக அமைப்பின் தலைவர் டக்லஸ் நாணயக்கார, செயலாளர் அஜித் ஜயசிங்க உள்ளிட்ட நகரின் வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
1
2
3