රාජ්ය විශ්රාම වැටුපකට හිමිකම් නොකියන ජනතාව වෙනුවෙන් ශ්රී ලංකා සමාජ ආරක්ෂණ මණ්ඩලය මඟින් ක්රියාත්මක සමාජ ආරක්ෂණ විශ්රාම වැටුප් යෝජනා ක්රමයට, 2023-2024 වර්ෂවල සාමාජිකයින් බඳවා ගැනීමේ දී ක්රියාකාරී ලෙස දායකත්වයක් දක්වන ලද, නිලධාරීන් ඇගයීම හා ප්රවර්ධනය කිරීමේ නුවරඑළිය දිස්ත්රික් වැඩසටහන 2025.09.17වෙන දින ශ්රී ලංකා සමාජ ආරක්ෂණ මණ්ඩලයේ සභාපති එම්.කේ.ඩී. දිසානායක මහතාගේ සහ නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් තුෂාරී තෙන්නකෝන් මහත්මියගේ ප්රධානත්වයෙන් නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් කාර්යාලීය ශ්රවණාගාරයේ දී පැවැත්විණ.
2023-2024 ප්රාදේශීය මට්ටමින් වැඩිම පිරිසක් මෙම සමාජ ආරක්ෂණ විශ්රාම වැටුප් යෝජනා ක්රමයට බඳවා ගැනීම වෙනුවෙන් නුවරඑළිය දිස්ත්රික්කයේ ප්රාදේශීය ලේකම් කාර්යාල අතරින් ප්රථම ස්ථානය දිනාගැනීමට කොත්මලේ ප්රාදේශීය ලේකම් කාර්යාලය සමත් වූ අතර වැඩිම සාමාජිකයින් සංඛ්යාවක් බඳවා ගනිමින් හා වැඩිම සාමාජිකයන් විශ්රාම වැටුපට දායක කරගැනීම වෙනුවෙන් සිදුකරන ලද සේවය උදෙසා 2023 වර්ෂයේ හොඳම නිලධාරිණිය ලෙස ඇගයීමට පාත්ර වූයේ වලපනේ ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ ග්රාම නිලධාරීනී ඩී.ජී.ඩී එච් නිරංජලා මහත්මියයි. 2023 ශ්රී ලංකාවේ වැඩිම බදවාගැනීම් සිදුකල නිලධාරිනිය වන්නේ ද ඇයයි. 2024 වර්ෂයේ වැඩිම සාමාජිකයින් සංඛ්යාවක් බඳවා ගනිමින් හා වැඩිම සාමාජිකයන් විශ්රාම වැටුපට දායක කරගැනීම වෙනුවෙන් සිදුකරන ලද සේවය උදෙසා හොදම නිලධාරිනිය වන්නේ කොත්මලේ ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ ග්රාම නිළධාරිනී ආර්.ජී.ආර්.එම් රාජපක්ෂ මහත්මියයි.
සමාජ ආරක්ෂකණ විශ්රාම වැටුප් ක්රමයට නුවරඑළිය දිස්ත්රික්කයේ සමස්ත සාමාජිකයින් බඳවා ගැනීම 65409 හා සමස්ත විශ්රාම වැටුප් ගෙවීම් 737 ක් වන අතර ඒ සඳහා දායකත්වය දුන් නිලධාරීන් 66 දෙනෙකු මෙහිදී ඇගයීමට ලක්විණ.
මෙම අවස්ථාවට ශ්රී ලංකා සමාජ ආරක්ෂණ මණ්ඩලයේ සාමාන්යාධිකාරි ඒ.කේ.එස්. කළුආරච්චි මහතා , නියෝජ්ය සාමාන්යාධිකාරි කල්හාරි ද සිල්වා මහත්මිය ,ග්රාමීය සංවර්ධන සමාජාරක්ෂණ ප්රජා සවිබල ගැන්වීම් ගරු අමාත්යතුමන්ගේ මහජන සම්බන්ධතා නිලධාරී රෝහන් ප්රනාන්දු මහතා, නුවරඑළිය අතිරේක දිස්ත්රික් ලේකම් (පාලන) දිනිකා කවිසේකර මහත්මිය, අතිරේක දිස්ත්රික් ලේකම් (ඉඩම්) ශාලිකා ලිදකුඹුර මහත්මිය ඇතුළු මාණ්ඩලික නිලධාරීන් ප්රාදේශීය සමාජ ආරක්ෂණ නිලධාරීන් ඇතුළු ඇගයුම්ලාභීන් පිරිසක් සහභාගි වූහ.
சமூகப் பாதுகாப்பிற்காக தம்மை அர்ப்பணித்த உத்தியோகத்தர்களை கௌரவித்தல்….
---------------------------
அரச ஓய்வூதியம் உரித்தற்ற மக்களுக்காக இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய உத்தேசத்திட்டத்திற்கு 2023-2024 ஆண்டுகளில் அங்கத்தவர்களை ஆட்சேர்த்துக்கொள்ளும்போது செயற்பாட்டு ரீதியில் பங்களிப்பு வழங்கிய, உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் பொருட்டான நுவரெலியா மாவட்ட நிகழ்வு 2025.09.17 ஆம் திகதி இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் தலைவர் திரு.எம்.கே.டி.திஸாநாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன் ஆகியோரின் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
2023-2024 பிரதேச மட்டத்தில் அதிகமானோரை இந்த சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய உத்தேசத்திட்டத்தில் ஆட்சேர்த்துக்கொண்டமைக்காக நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கிடையே கொத்மலை பிரதேச செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், அதிக எண்ணிக்கையான அங்கத்தவர்களை ஆட்சேர்த்துகொண்டு, அதிக எண்ணிக்கையான அங்கத்தவர்களை ஓய்வூதியத்திற்கு பங்களிப்பு செய்துகொள்ளும் பொருட்டு மேற்கொண்ட சேவைகளை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டில் சிறந்த உத்தியோகத்தராக வலப்பனை பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் திருமதி.டி.ஜீ.டி.எச்.நிரஞ்சலா கௌரவிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டில் இலங்கையிலேயே அதிகமான ஆட்சேர்ப்பினை மேற்கொண்ட உத்தியோகத்தரும் ஆவரேயாவார். 2024 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையான அங்கத்தவர்களை ஆட்சேர்த்துக்கொண்டு, அதிக எண்ணிக்கையான அங்கத்தவர்களை ஓய்வூதியத்திற்கு பங்களிப்பு செய்வித்த உத்தியோகத்தர் கொத்மலை பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் திருமதி.ஆர்.ஜீ.ஆர்.எம்.ராஜபக்ஷ ஆவார்.
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு நுவரெலியா மாவட்டத்தில் மொத்தமாக ஆட்சேர்த்துக்கொள்ளப்பட்ட அங்கத்தவர்களின் எண்ணிக்கை 65409 ஆவதுடன், மொத்த ஓய்வூதியம் செலுத்தல் 737 ஆகும். அதற்காக பங்களிப்பு நல்கிய 66 உத்தியோகத்தர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் பொது முகாமையாளர் திரு.ஏ.கே.எஸ்.கலுஆராச்சி, பிரதி பொது முகாமையாளர் திருமதி.கல்ஹாரி த சில்வா, கிராம அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் அவர்களின் பொதுமக்கள் இணைப்பு உத்தியோகத்தர் திரு.ரோஹன் பிரனாந்து, நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திருமதி.தினிகா கவிசேகர, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி.ஷாலிகா லிந்தகும்புர உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச சமூகப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பாராட்டுதலுக்கு உள்ளான பலர் கலந்துகொண்டனர்.


















